செவ்வாய், 1 ஜூன், 2010

அக்கினிகுஞ்சு

"நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்து விட்டால்"என்று உள்ளம் கொதிக்க பாடிய பாடல்.இன்று மனம் வெதும்ப பாடத்தோன்றுகிறது.தற்கால கவிஞ்சர்களை நினைத்து.அந்த முண்டாசு கவிஞ்சனின் கவிதை
காலத்தை வென்று நிற்க காரணம்,கவிதையில் உள்ள உண்மை ,அவன் வேறு கவிதை வேறு என வாழ வில்லை.கவிதையாய் அவன் இருந்தான்.உண்மையை உரக்க சொன்னான்.நாட்டை ஆண்டவனுக்கு பயப்படவில்லை
நெஞ்சுக்கு நீதி எனப்பட்டதை கொஞ்சமும் தயங்காமல் பொதுவில் வைத்தான்.தனக்காக வாழவில்லை அந்த தன்மான சிங்கம்.மக்களை நினைத்தான்,ஆனால் இன்றோ கவிஞ்சன் என தன்னை
சொல்லிக்கொள்ளும் மனிதர்கள் எல்லாம்'கவிதைக்கு பொய்யழகு " என பாடி தமிழை விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.கவிதையின் வீச்சு அது தாங்கி நிற்கும் உண்மையில் உள்ளது.பொய்யான கனவுலகிற்கு புனைந்துரைத்து கை நிறைய காசு பார்ப்பதே நோக்கம் என வாழும் இவர்களை காலம் கவிஞ்சன் என பதிவு செய்யாது.
              கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நம் சகோதரனின் உயிர்  காற்றில் கரைந்துக்கொண்டு இருக்கும் போது,இங்கு தம் மக்களின் எதிர் கால வாழ்வுக்கு  அலைபவர்களை தாங்கி பிடிப்பவன் கவிஞ்சனா?,அவர்களை காப்பாற்றும் வாய்ப்பு இருந்தும் அதை மறந்து, அரசியல்நாடகம் நடத்துபவர்களை கவிதைபாடி
மகிழ்விக்கும் இவர்களை கவிஞ்சன் என எவன் அழைத்தாலும் அவன் தமிழனா?,
கடல் கடந்து வந்த காற்றில் நம் சகோதரனின் சுவாசமும் உள்ளதே,அவனின் உயிர்
மூச்சும் உள்ளதே.அது மன்னிக்குமா உன்னை ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக