ஞாயிறு, 6 ஜூன், 2010

காலப்பெருவெளி

"கால தேவன் என் வீட்டு கதவை தட்டும்போது
அவனை இன் முகத்தோடு வரவேற்க்கவேண்டும்"-என்றார்.தாகூர்.எத்தனை பேரால் இவ்விதம் வாழ்வை எதிர்கொள்ள  முடியும். கணத்துக்கு கணம் வாழ்வை பூரணமாக வாழ்ந்த ஒரு மகா கவிஞ்சனால்தான் இவ்விதம் சொல்லமுடியும்.விலங்குகள் கூடத்தான்
வாழ்கிறது.மனிதனும் ஒரு சமூக விலங்குதான்.சிந்திக்கும் ஆற்றல் கொண்ட,அறிவு கொண்ட விலங்கு.அந்த சிந்தனையால்,அறிவால் தன்னையும்,தான் சார்ந்த சமுகத்தையும் மேம்பாடு அடைய செய்யாமல் வாழ்ந்து மடிந்தால் அவன் விலங்குதான்.
தன் அறிவால் வாழும் முறையை,தரத்தை,ஒழுக்கத்தை கண்டடைந்தான்.அதில்தான் விலங்கிலிருந்து மனிதன் வேறுபடுகிறான்.உடல் சார்ந்து வாழும் விலங்கிற்கும் மேலே மனம் சார்ந்தவாழ்வை சுகித்தான்.அறிவு சார்ந்த தளத்தில் சிந்தித்தான்.ஆன்மாவினை கண்டடைந்தான்.எல்லா உயிர்களிலும் உள்ளீடாய் ஆன்மா பிரகாசிப்பதை தரிசித்தான்.
அந்த தரிசனம் ஒரு புதிய கதவினை திறந்தது.அறிவு அனுபவமாய் பரிமாணம் கொள்ளும் போது,எல்லா உயிர்களிடத்திலும் உறையும் ஆன்மாவின் பரிணாமம்
காலப்பெருவெளியில் நிறைந்துள்ளதை அனுபவித்தான்.அந்த அனுபவ முதிர்வை ஞானமாய்
உலகிற்கு வழங்கினான்.

ஒரு மனிதன் வாழும் காலம் எத்தனை ஆண்டு"மானுஷ சதா ரூபேண',என்கிறது வேதம்.தற்காலத்தில் அது சாத்தியமில்லை.முறையற்ற உணவாள்,வாழ்வாள்,உணர்வாள்
தறிகெட்டு போன வாழ்வு நம்முடையது.அதனால் நூறு ஆண்டுகால வாழ்வு "நமீதா கனவு"தான்.வேண்டுமானால் 75 ஆண்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக