ஞாயிறு, 6 ஜூன், 2010

காலப்பெருவெளி -2

75x12=2250-மாதங்கள், 2250x30=67500-நாட்கள், 67500x24=1620000-மணித்துளிகள்,1620000-மணி நேரங்களில் நீங்கள் உறங்கும் நேரத்தை கழித்து விடுங்கள் ஏனெனில் அப்போது நாம் மரணத்தின் ஒத்திகையை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.ஒருநாளைக்கு 8-மணிநேரம் உறங்குவீர்களா.8x67500=540000-மணிநேரம்.1620000-540000=மீதி 1080000.நேரம்.
இதில் உங்கள் இளம் பிராயத்தையும் நீக்கிவிடலாமே.20-ஆண்டு கல்விக்கும், வாழ்வை கவனிப்பதற்கும் சரியைபோயவிடும்.20x12=240-மாதங்கள்.240x30=7200-நாட்கள்,7200x18=129600-மணிநேரங்கள்.
1080000-129600=950400=மணிநேரம்.இந்த நேரத்தில் நீங்கள் வாழ்ந்து முடித்த நாட்களை கழித்து பாருங்கள்.மரணத்தின் அருகில் நீங்கள் எவ்வளவு தூரம் நெருங்கி வந்து இருபது புரியும்.இந்த வயது வரை நாம் கழட்டியதும் என்ன என்பதும் உரைக்கும்.
இதில் நமீதா,தமனா,குஷ்பூசமூக சேவை குறித்த கவலைகள் வேறு.நம் வாழ்வை தின்று விடுகிறது.காதலில் சில காலம்,காமத்தில் சிலகாலம்,கேளிக்கையில் சிலகாலம், மதுவின் மயக்கத்தில் சிலகாலம் என வாழ்க்கை தின்று போட்ட மீதி நாட்கள் எவ்வளவு உள்ளது உன்னிடத்தில். நம் வாழ்க்கை பிறப்பு என்னும் புள்ளியில் ஆரம்பித்து மரணம் என்னும் புள்ளியை நோக்கி நகர்ந்துக்கொண்டே உள்ளதை உணர்ந்தாயா?. நாம் எதிர் கொள்ள தவிர்க்கும் அந்த கோர முகத்தை ஒரு நாள் அனைவரும் தரிசித்தே ஆகவேண்டும். நீ அதை மறந்தாலும் உன்னை அது மறக்காமல் துரத்திக்கொண்டே வந்து அடையும்.காலப்பெருவெளியில் மரணத்தின் கோரா வாயில் விழுங்கப்படும் இறையாய் நம் வாழ்வு.
இங்கு உன் இருத்தலின் மீதம் என்ன?யோனிக்குள் செலுத்தப்பட்ட உன் எச்சத்தின் மிச்சம் மட்டுமா?வாழ இடம் தந்த பூமி பந்துக்கு என்ன தந்தாய்.?

காலப்பெருவெளி

"கால தேவன் என் வீட்டு கதவை தட்டும்போது
அவனை இன் முகத்தோடு வரவேற்க்கவேண்டும்"-என்றார்.தாகூர்.எத்தனை பேரால் இவ்விதம் வாழ்வை எதிர்கொள்ள  முடியும். கணத்துக்கு கணம் வாழ்வை பூரணமாக வாழ்ந்த ஒரு மகா கவிஞ்சனால்தான் இவ்விதம் சொல்லமுடியும்.விலங்குகள் கூடத்தான்
வாழ்கிறது.மனிதனும் ஒரு சமூக விலங்குதான்.சிந்திக்கும் ஆற்றல் கொண்ட,அறிவு கொண்ட விலங்கு.அந்த சிந்தனையால்,அறிவால் தன்னையும்,தான் சார்ந்த சமுகத்தையும் மேம்பாடு அடைய செய்யாமல் வாழ்ந்து மடிந்தால் அவன் விலங்குதான்.
தன் அறிவால் வாழும் முறையை,தரத்தை,ஒழுக்கத்தை கண்டடைந்தான்.அதில்தான் விலங்கிலிருந்து மனிதன் வேறுபடுகிறான்.உடல் சார்ந்து வாழும் விலங்கிற்கும் மேலே மனம் சார்ந்தவாழ்வை சுகித்தான்.அறிவு சார்ந்த தளத்தில் சிந்தித்தான்.ஆன்மாவினை கண்டடைந்தான்.எல்லா உயிர்களிலும் உள்ளீடாய் ஆன்மா பிரகாசிப்பதை தரிசித்தான்.
அந்த தரிசனம் ஒரு புதிய கதவினை திறந்தது.அறிவு அனுபவமாய் பரிமாணம் கொள்ளும் போது,எல்லா உயிர்களிடத்திலும் உறையும் ஆன்மாவின் பரிணாமம்
காலப்பெருவெளியில் நிறைந்துள்ளதை அனுபவித்தான்.அந்த அனுபவ முதிர்வை ஞானமாய்
உலகிற்கு வழங்கினான்.

ஒரு மனிதன் வாழும் காலம் எத்தனை ஆண்டு"மானுஷ சதா ரூபேண',என்கிறது வேதம்.தற்காலத்தில் அது சாத்தியமில்லை.முறையற்ற உணவாள்,வாழ்வாள்,உணர்வாள்
தறிகெட்டு போன வாழ்வு நம்முடையது.அதனால் நூறு ஆண்டுகால வாழ்வு "நமீதா கனவு"தான்.வேண்டுமானால் 75 ஆண்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

செவ்வாய், 1 ஜூன், 2010

அக்கினிகுஞ்சு

"நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்து விட்டால்"என்று உள்ளம் கொதிக்க பாடிய பாடல்.இன்று மனம் வெதும்ப பாடத்தோன்றுகிறது.தற்கால கவிஞ்சர்களை நினைத்து.அந்த முண்டாசு கவிஞ்சனின் கவிதை
காலத்தை வென்று நிற்க காரணம்,கவிதையில் உள்ள உண்மை ,அவன் வேறு கவிதை வேறு என வாழ வில்லை.கவிதையாய் அவன் இருந்தான்.உண்மையை உரக்க சொன்னான்.நாட்டை ஆண்டவனுக்கு பயப்படவில்லை
நெஞ்சுக்கு நீதி எனப்பட்டதை கொஞ்சமும் தயங்காமல் பொதுவில் வைத்தான்.தனக்காக வாழவில்லை அந்த தன்மான சிங்கம்.மக்களை நினைத்தான்,ஆனால் இன்றோ கவிஞ்சன் என தன்னை
சொல்லிக்கொள்ளும் மனிதர்கள் எல்லாம்'கவிதைக்கு பொய்யழகு " என பாடி தமிழை விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.கவிதையின் வீச்சு அது தாங்கி நிற்கும் உண்மையில் உள்ளது.பொய்யான கனவுலகிற்கு புனைந்துரைத்து கை நிறைய காசு பார்ப்பதே நோக்கம் என வாழும் இவர்களை காலம் கவிஞ்சன் என பதிவு செய்யாது.
              கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நம் சகோதரனின் உயிர்  காற்றில் கரைந்துக்கொண்டு இருக்கும் போது,இங்கு தம் மக்களின் எதிர் கால வாழ்வுக்கு  அலைபவர்களை தாங்கி பிடிப்பவன் கவிஞ்சனா?,அவர்களை காப்பாற்றும் வாய்ப்பு இருந்தும் அதை மறந்து, அரசியல்நாடகம் நடத்துபவர்களை கவிதைபாடி
மகிழ்விக்கும் இவர்களை கவிஞ்சன் என எவன் அழைத்தாலும் அவன் தமிழனா?,
கடல் கடந்து வந்த காற்றில் நம் சகோதரனின் சுவாசமும் உள்ளதே,அவனின் உயிர்
மூச்சும் உள்ளதே.அது மன்னிக்குமா உன்னை ......

புதன், 26 மே, 2010

உயிர்வலி

எனக்கு நினைவு தெரிந்தநாள் முதலாய்மாமிசம் உண்ணுவதை தவிர்த்தே வந்தேன்.என்மனம் அமைதிசொருபமாக இருப்பதற்கு இதுவுமொரு காரணம்.
நான் நடக்கும் பாதையில் வெறி நாய் எதிர்பட்டாலும்,எனைப்பார்த்து சாந்தமாகவே போகிறது. கடிக்க வருவதில்லை.
வீட்டில் தேள்பாம்பு,பூரான், முதலிய விஷ ஜந்துக்கள் கூட என்னை தீண்டுவதில்லை.ஏன் என்றால் நான் எல்லா
உயிரையும் அன்போடு நேசிப்பவன், நோக்குபவன் .என்
பார்வையில் கருணையும், அன்புமே வெளிப்படும் அதை
அந்த உயிர்கள் உணர்ந்து கொள்கிறது. எனவே என்னை நட்புடனே பார்க்கிறது.
எல்லா உயிர்களையும் நான் உணவாக பார்ப்பதில்லை. எங்கும் நிறைந்த
பரம்பொருளின் மறுவடிவமாகவே பார்க்கிறேன்.இது எனது அனுபவ உண்மை.
நம் எண்ணங்களை, உணர்வுகளை, அன்பைஎல்லா உயிர்களும்
உணர்ந்து கொள்கிறது.

திங்கள், 24 மே, 2010

உயிர்வலி

மாலை நேரம் வழக்கம் போல் புத்தகத்தில் மூழ்கி கிடந்தேன்.என்நினைவை கலைத்துபோட்டது நாய்களின்
குறைப்புசத்தம்அதன் குரலில் ஆவேசமும்,குரோதமும்
வெளிப்பட்டது.எல்லா நாய்களும் ஒரே மாதிரி குரலில்
வேகத்தை காட்டியது அது தமக்குள் சண்டைப்போட்டுக்கொள்ளவில்லை எனபது மாத்திரம் புரிந்தது.
வீதியின் எதிர் திசையை நோக்கி குறைத்தபடி ஓடியது
`என்ன என ஆர்வமுடன் பார்க்க வைத்தது.தெருவின் கோடியில் நரிகொறவன் ஒருவன் கையில் நான்கு காடையும், கவ்தாரியும்எடுத்துக்கொண்டு நடந்து வந்துக்கொண்டு இருந்தான்.
பறவை,முயல்,காட்டுக்கோழிமுதலியவற்றை கொன்று
ஜீவனம் செய்வது அவன் தொழில்.பச்சை மாமிசவாசம்
உடன் காற்றில் பரவிவரும்.குளித்து பல மாதங்களாகும்
அழுக்கு தோற்றம்.வீதியில் நடக்கையில் நாய்கள் விரட்டுவது இயல்புதான் என நான்சிறுவயது முதல்நினைத்துவந்தேன்.ஆனால்..
உலகில் ஜீவனோபாயமாக எத்தனையோ தொழில்இருக்க
தன் உயிர் வளர்க்க மற்றஉயிரை வதைத்துவாழும் முறையை என்னால்ஏற்க முடியவில்லை.உயிர்வலி
எல்லாஉயிருக்கும் ஒன்றுதானே?
மனிதராய் பிறந்துவிட்ட நாம்மட்டும் எந்தவிதத்தில் உயர்ச்சி.உலகில்வாழும் ஆசையும்,ஈர்ப்பும்,நாட்டமும்
ஒன்றுதானே.ஆறாவது அறிவு உயிர்களின்மேல் கருணை
காட்டுமா விலங்குகள்போல் மற்றஉயிர்களை கொன்று
சாப்பிடுமா.எனவே எனக்கு கூட குறவர்களை கண்டால்
மனம் அருவெறுக்கும்.
அந்தகுறவன் மெல்ல வீதியைக்கடந்து போனான் நாய்களின் குறைப்பு சத்தமும் அடங்கியது.
என் சிந்தனை மெல்ல மெல்ல சுயபரிசோதனையில்
வட்டமிட்டது.
உயிர்வலி மனிதனுக்கு தெரிகிறதோ இல்லையோ விலங்குகளுக்கு தெரிகிறது.பல உயிர்களை கொன்று
பிழைக்கும் மனிதனை நாய் அறிகிறது.பேச தெரிந்த மனிதன் மனதிலும், அறிவிலும் சிக்குண்டு கிடக்கிறான்.
நுண்ணியஉணர்வு மழுங்கிவிட்டது.
உயிரினங்களை கொன்று வாழும் மனிதனின் வருகை
நுண்உணர்வால் புரிந்து எதிர்க்கிறது.
அன்பை வெளிப்படுத்தும் மனிதன்முன்னாள் நன்றியுடன்
வாலாட்டுகிறது.உதவுகிறது.உயிர்களை கொள்ளும்
ஏற்படும் அதிர்வுகள்அந்த உயிரின்வலி,உயிர்பிரியும்
போது தவிக்கும் தவிப்பு,கடைசி தாகம்இவை அனைத்தும்
பாதிக்காதா?.
என்
அனுபவத்தில் புலால் உண்ணாமல் வாழும் மனிதர்களை கண்டால் நாய்கள் குறைப்பதில்லை.

ஞாயிறு, 23 மே, 2010

வாழ்வு ஒரு விளையாட்டு

மானுட பிறப்பு எல்லாம் சுயம்புதான்.நம்பிறவி தாய்தந்தை வழியாக நிகழ்ந்தது அவ்வளவே.சுயப்ரகாசமானநிறை உணர்வு தன்னில் விரிவாக்கம்
கொள்ள,சித்தம்,மனம்,புலன்,புறஅவயவங்களை பயன்படுத்துகிறது.
உலகோடு தொடர்பும்உலகின்செயலுக்கு உறுதுணையாய் பங்காற்றிவிளையாட்டை தொடர்கிறது.இதில் நிறைஉணர்வில்
நிலை பெற்றவன் விடுதலை பெறுகிறான்.மற்றவன் மீண்டும் மீண்டும்
விளையாட வருகிறான்.விளையாடி பார்ப்போமா...